'பாச மலர்' பதிவர் மதுரை காரவுக, பொழைப்புக்காக சவுதி அரேபியாவுல இருக்காக,
மதுரை தமிழ் இவுக எழுத்தில் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டமுங்க.அவிங்க ஊரு பாஷை எல்லாம் மறந்துட்டாய்ங்க போல:))
காதல் 'கவிதை ' எல்லாம் கிறுக்கிற வயசுல இவுக இல்லீங்கறதால ,
சிந்திக்க வைக்கும் அருமையான கவிதை எல்லாம் நிறைய எழுதிருக்காக.
பாசமலரின் எழுத்தில ஒரு வித சோகம், ஏக்கம் எல்லாம் மறைஞ்சிட்டிருக்கும், அது ஏன்னுத்தேன் புரியல!!!
மனம்திறந்து சொல்ல நினைக்கிறதை அழகாக பதிவுல கேட்டுப்புடுவாக.
யார் பித்தன் ...அப்படின்னு ஒரு சிறுகதை எழுதிருப்பாக பாருங்க,
அந்த கதைல ஒரு எழுச்சி தெரியும், அவ்வளவு நல்லா எழுதிருக்காக.
மனசார பாராட்டெல்லாம் தெரிவிப்பாக மத்தவக பதிவு பின்னூட்டதுல,
மகராசி நல்லாயிருக்கோனும் நீங்க:))
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment