சமீபத்தில் மணவாழ்க்கையில் வலது கால் எடுத்து வைத்திருக்கும் பதிவர் 'குசும்பன்' னின் வலைதளம் பத்தி பேசுவோமா........
இவரு பேருக்கு பொறுத்தமா ரொம்பத்தேன் குசும்பு பண்ணுவாரு, மனசுல தோன்றதை 'சட்டுன்னு' யாருக்கும் பயப்படாம பதிவுல சொல்லுவாரு பாருங்க.......அங்க தான் இவரு நிக்கிறாரு[?]
பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கும் குசும்போட தான் பதிலடி கொடுப்பாரு, உடம்பு முழுக்கு அம்புட்டு கொழுப்பு.......ஸாரி குசும்பு!
அஜால்ஸ் குஜால்ஸ் பதிவெல்லாம் போட்டு தாக்குவாரு, 'பெல்லி டான்ஸ்' படமெல்லாம் போட்டு பட்டைய கிழப்பினார்.........இனிமே அப்படி பட்டைய கிழப்பினா , வீட்டுல தங்கமணி 'பூரி' கட்டை உம்மண்டையை பொழக்கும் ன்னு எச்சரிக்கை விட்டிருக்கிறதா கேள்வி:)
மனுஷனுக்கு புகைப்படக்கலையிலும் நல்லா ஆர்வம் இருக்கு, இல்லீனா தைரியமா தன்னையே படம் புடிச்சு பதிவுல போடுவாரா??
ஆனந்த விகடன் பத்திரிக்கையில கூட விளம்பரமெல்லாம் கொடுத்தாக இவுகளுக்கு:))
அன்னாச்சி வீட்டுல குறும்பு, பதிவுல குசும்புனு கலக்குங்க, வாழ்த்துக்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment